Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை

In இலங்கை
Updated: 10:29 GMT, Mar 2, 2018 | Published: 10:29 GMT, Mar 2, 2018 |
0 Comments
1152
This post was written by : poovannan

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையை வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னாரில் கெயெழுத்து வேட்டை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், அதன் தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் குறித்த கையெழுத்து போராட்டம் மன்னாரிலும் இடம்பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , பொது மக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடை பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg