Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கு ஆபிரிக்காவில் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

In
Updated: 04:03 GMT, Mar 3, 2018 | Published: 04:03 GMT, Mar 3, 2018 |
0 Comments
1210
This post was written by : Suganthini

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பசோவின் தலைநகர் வாகடூகுவில் இடம்பெற்ற தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் வாகடூகுவிலுள்ள பிரான்ஸ் தூதரகம் மற்றும் ராணுவத் தலைமையகத்தை இலக்குவைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிதாரிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் படை வீரர்களும் தாக்குதல்தாரிகளும் அடங்குவதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த 80 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பயங்கரவாத ஒழிப்புக் கூட்டம் நடைபெறவிருந்த வேளையில், ராணுவத் தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்நிலையில், கூட்டத்தைப் பிறிதொரு இடத்தில் நடத்தியதாகவும் புர்கினா பசோவின் பாதுகாப்பு அமைச்சர் க்ளெமென்ட் சவாடோகோ (Clement Sawadogo) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜின் வ்வைஸ் லீ டிரைன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg