Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2025ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்கீடு: மங்கள

In இலங்கை
Updated: 11:35 GMT, Mar 3, 2018 | Published: 11:35 GMT, Mar 3, 2018 |
0 Comments
1075
This post was written by : Anojkiyan

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தில், நூற்றுக்கு 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க முடியும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை- பிட்டபெத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த வரவுசெலவு திட்டத்தில் கல்விக்காக 333 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய வரவுசெலவு திட்டத்தில் 100க்கு 3 வீதத்திற்கும் அதிகமான நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததியினரை பலப்படுத்த செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பெறுமதியானது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்ப்பார்த்தள்ளோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg