Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலவாக்கலையில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 05:20 GMT, Mar 5, 2018 | Published: 03:01 GMT, Mar 5, 2018 |
0 Comments
1113
This post was written by : Anojkiyan

தலவாக்கலை பகுதியில் உயிரிழந்த நிலையில், சிறுத்தையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய வளாகப் பகுதியிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட, பாடசாலையின் சிரமதானப் பணிகளின் போது சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுத்தையின் உடலை நுவரெலியா வனவிலங்கு காரியாலயத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg