Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலந்தில் கட்டடம் சரிந்து நால்வர் உயிரிழப்பு

In
Updated: 05:19 GMT, Mar 5, 2018 | Published: 05:19 GMT, Mar 5, 2018 |
0 Comments
1101
This post was written by : Suganthini

போலந்தின், போஸ்னன் பகுதியிலுள்ள 18 மாடிக் கட்டடமொன்று உடைந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு நகரான போஸ்னன் பகுதியிலுள்ள குறித்த குடியிருப்புக் கட்டடம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உடைந்து வீழ்ந்தது. இதன்போது நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 24 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகின்ற நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணியில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குடியிருப்பில் 40 குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில், இவர்கள் பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே கட்டடம் உடைந்து வீழ்ந்தமைக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg