Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மண்ணில் தென்னாபிரிக்கா தோல்வி: வெற்றி நடைபோடும் அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 09:06 GMT, Mar 5, 2018 | Published: 09:06 GMT, Mar 5, 2018 |
0 Comments
1191
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 118 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கடந்த முதலாம் திகதி டர்பன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி தனது முதல் இன்னிங்ஸிற்காக அவுஸ்ரேலிய அணி, 351 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக மிட்செல் மார்ஷ் 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 162 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

189 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக பெங்ரோப்ட் 53 ஓட்டங்களை பெற்றுகொண்டார். பந்து வீச்சில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனடிப்படையில் தென்னாபிரிக்க அணிக்கு 417 ஓட்டங்களை அவுஸ்ரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எனினும் இந்த வெற்றி இலக்கை எட்ட முடியாத தென்னாபிரிக்க அணி, 298 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஹெய்டன் மார்க்கம் 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸிலும் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டாக் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg