Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனின் சகோதரியை சிறையிலடைக்க உத்தரவு

In இந்தியா
Updated: 11:27 GMT, Mar 5, 2018 | Published: 11:26 GMT, Mar 5, 2018 |
0 Comments
1129
This post was written by : Kemasiya

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனின் சகோதரி சீதளாதேவி மற்றும் அவருடைய கணவர் பாஸ்கரன் ஆகியோரை சிறையிலடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இவர்களை கைது செய்வதற்கு பிடிவராண்ட் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இவர்கள் சி.பி.ஐ.இல் சரணடைந்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என்றும், அவர்களை சி.பி.ஐ. நீதிமன்றில் ஆஜராகுமாறும் கடந்த ஆண்டு (2017) நவம்பர் 16ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் இவர்கள் ஆஜராகாத நிலையிலேயே இன்று பிடிவராண்ட் விதிக்கப்பட்டது.

டிடிவி தினகரன் சகோதரி சீதளாதேவி, அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 1.68 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது உறுதியானதையடுத்து அவர்களுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் தண்டனை விதித்தது.

சசிகலாவின் அக்கா மகள் சீதளாதேவிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனையும் 10லட்ச ரூபாய் அபராதமும், அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனையும் 20லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg