Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகாவலி நீரை வட. பகுதிக்கு கொண்டுவரும் தேவை இருக்கிறது -ப.சத்தியலிங்கம்

In இலங்கை
Updated: 12:11 GMT, Mar 5, 2018 | Published: 12:11 GMT, Mar 5, 2018 |
0 Comments
1092
This post was written by : poovannan

மகாவலி நீரை வட. பகுதிக்கு கொண்டு வருவதற்கான தேவை நிச்சயமாக இருக்கிறது. இந்நீரைக் கொண்டுவரும் போது, வேறு மாகாணங்களை சேர்ந்த மக்கள் இங்கு குடியேற முயற்சி செய்வர் என்பதில் அவதானமாக இருக்க வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவனியாவில் வட. மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று (திங்கட்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், “வட. பகுதியிலே நீர்ப் பிரச்சினை என்பது முக்கியமானதாக காணப்படுகிறது. மகாவலி நீர்ப்பாசன திட்டம் என்பது எமது வவுனியா மாவட்டத்திலே 30 குளங்களில் நீர் வருகையை உறுதிப்படுத்தும் திட்டமாக இருக்கின்றது.

முதலமைச்சர் மற்றும் ஜப்பான் பிரதிநிதிகளினுடான கலந்துரையாடலில் நாம் இது தொடர்பாக குறிப்பிட்டோம். இந்த திட்டம் முக்கியமான திட்டமாக இருந்தாலும், புதிதாக சட்டங்களை இயற்றி எமது நிலம் அக்கிரமிக்கப்படாத வகையிலே இந்த நீர் வட மாகாணத்துக்கு கொண்டு வரவேண்டும். அதற்காக நாடாளுமன்றத்திலே திருத்தங்களை செய்வதன் தேவை இருக்கிறது.

மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எம்மை தேடி வரும் வாழ்வாதாரமற்ற மக்களுக்கு பெருந்தொகையான நிதியினை செலவு செய்கின்றோம் . ஆனால் அந்த நிதி எவ்வளவு பயனுள்ளதாக செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஓர் ஆய்வு முக்கியமானது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg