Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகார்த்திகேயனுடன் இணையும் இரண்டு பிரபலங்கள்!

In சினிமா
Updated: 04:14 GMT, Mar 6, 2018 | Published: 04:14 GMT, Mar 6, 2018 |
0 Comments
1089
This post was written by : Vithushagan

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், இந்த படத்தில் மேலும் இரு பிரபலங்கள் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேலைக்காரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு வித்தியாசமான படமாகவும் அமைந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பணியாற்றிய கலை இயக்குநர் முத்துராஜ் இந்த படத்திற்கும் கலை பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் படத்தில் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார், அடுத்து விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார்.

வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக ‘ மாறுகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg