Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைமடுக்குளத்தின் நீரைப் பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கை!

In இலங்கை
Updated: 10:25 GMT, Mar 6, 2018 | Published: 10:25 GMT, Mar 6, 2018 |
0 Comments
1067
This post was written by : Ravivarman

கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் நீரைப்பயன்படுத்தி இவ்வாண்டு 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோகச்செய்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி கோவிந்தன்கடைச்சந்தியில் அமைந்துள்ள இரணைமடுத்திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர சிறிய குளங்களின் நீர்மட்டம் குறைவாகக் காணப்படுவதுடன், சில குளங்கள் நீர் வற்றிக்காணப்படுகின்றன.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் மற்றும் புதுமுறிப்புக்குளம் ஆகியவற்றிலிருக்கின்ற நீரைப்பயன்படுத்தி குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது.

36அடி நீர்கொள்ளளவைக் கொண்ட கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 16 அடி மூன்று அங்குலமாகக் காணப்படுகின்றது.
இதில் பத்து அடி வரையான தண்ணீரைக் குளத்தின் பாதுகாப்புக்கருதி தேக்கி வைப்பது எனவும் ஏனைய நீரைப்பயன்படுத்தி சிறுபோகச்செய்கை மேற்கொள்வதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

இதில் இரணைமடு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்த கொண்டனர்.

நீரைச்சிக்கனமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி வெற்றிகரமான விவசாயச்செய்கையை மேற்கொள்வதென்றும் அதன்படி குளத்தின் நீரைக்கொண்டு 900 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகப்பயிர்ச்செய்கை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த பயிர்ச்செய்கையை இரணைமடுக் குளத்தின் கீழான பன்னங்கண்டி கமக்கார அமைப்பின் கீழ் உள்ள பயிர்ச்செய்கை நிலங்களில் நெற்செய்கை மேறகொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதுடன், இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரமளவில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் எடுக்கப்படவுள்ளதாக இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg