Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி விவகாரம்: அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள்!

In இலங்கை
Updated: 06:42 GMT, Mar 7, 2018 | Published: 06:42 GMT, Mar 7, 2018 |
0 Comments
1196
This post was written by : Varshini

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்கள் இன்று கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில், கண்டியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், இன்றைய தினம் வழமைக்கு மாறாக மேலதிக அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக ஆகியோருக்கு மேலதிகமாக கபிர் ஹாசீம், சரத் அமுனுகம, ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பின்னர் அமைச்சரவை சந்திப்புக்களை புறக்கணித்து வந்த அமைச்சரவை இணைப் பேச்சாளர்களுள் ஒருவரான தயாசிறி ஜயசேகர இன்றைய தினமும் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg