Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலியில் கூட்டணி அமைக்கும் இடது ஜனநாயகக் கட்சி!

In ஐரோப்பா
Updated: 08:04 GMT, Mar 7, 2018 | Published: 08:01 GMT, Mar 7, 2018 |
0 Comments
1058
This post was written by : Elakkiya

இத்தாலி பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில், Luigi Di Maio தலைமையிலான ஐந்து நட்சத்திரக் கட்சிக்கு மத்திய இடது ஜனநாயகக் கட்சி ஆதரவளிப்பதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் தோல்வியை அடுத்து ஜனநாயகக் கட்சியின் தலைவர் மத்தேயு ரென்சி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ள நிலையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய இடது ஜனநாயகக் கட்சி உறுப்பினரும், புக்லியா பிராந்திய ஆளநருமான மைக்கேல் எமில்லியனோ, ‘ ஐந்து நட்சத்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதை மத்தேயு ரென்சி தடை செய்திருந்தார். பொதுத் தேர்தலில் தனிக் கட்சியான அதிக வாக்குகளை பெற்றிருந்தது. அத்துடன் எதிர்கால கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தவும் முயற்சிக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.

அதேவேளை மற்றுமொரு மூத்த அரசியல் தலைவர் தெரிவிக்கையில், ஐந்து நட்சத்திர கட்சிக்கும் இடது ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி விரும்பத்தக்கதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான சாத்தியமான கூட்டணியே மத்தேயு ரென்சியின் பதவி விலகலுக்கு காரணமாக அமைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், குடியேற்றம் மற்றும் பொருளாதாரம் கவலைகளுக்கு மத்தியில் மத்திய இடது ஜனநாயகக் கட்சி 20 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதேவேளை Luigi Di Maio தலைமையிலான ஐந்து நட்சத்திரக் கட்சி 31 சதவீத வாக்குகளையும் சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான மைய வலதுசாரிக் கூட்டணி 37 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg