Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டு வீரர்கள் மீது ஐ.சி.சி ஒழுக்காற்று நடவடிக்கை!

In கிாிக்கட்
Updated: 10:13 GMT, Mar 7, 2018 | Published: 08:16 GMT, Mar 7, 2018 |
0 Comments
1117
This post was written by : Litharsan

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் மற்றும் தென்னாபிரிக்க அணி வீரர் குயின்டன் டி கொஹூ மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அண்மையில் அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட முடிவில் இவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

எனினும் அந்த முரண்பாடு மோதலாக மாறியது. குறித்த மோதல் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு ஐ.சி.சி.யின் நடத்தை விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் டி ஹூக் மீது முதல் நிலை குற்றச்சாட்டும், வோர்னர் மீது இரண்டாம் நிலை குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

டேவிட் வோர்னருக்கு அடுத்துவரும் போட்டியில் விளையாடத் தடை மற்றும் அபராதம் என்பன தண்டனையாக விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg