Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டு வருடங்களில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்: சுவாமிநாதன்!

In இலங்கை
Updated: 08:55 GMT, Mar 7, 2018 | Published: 08:55 GMT, Mar 7, 2018 |
0 Comments
1072
This post was written by : Ravivarman

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுவிடும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

முகமாலைப் பகுதிக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கிளிநொச்சி முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, கண்ணிவெடி அகற்றும் ஐ.நா. சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவிகளைப் பெற்றுத்தருவதற்கும் அவர் முன்வந்துள்ளார். இப்பகுதிகளில் விரைவாக கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இராணுவமும் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் விரைவாக இப்பணிகள் முடிவடையுமென நாம் நம்புகின்றோம்.

எனவே எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இப்பிரச்சினைகளைத் தீர்த்து மக்களுக்குரிய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம்’ என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg