Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஸ்ரியாவில் கத்திக்குத்து: நால்வர் படுகாயம்

In
Updated: 09:27 GMT, Mar 8, 2018 | Published: 09:27 GMT, Mar 8, 2018 |
0 Comments
1084
This post was written by : Suganthini

ஒஸ்ரியத் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற இருவேறு கத்திக்குத்துச் சம்பவங்களில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் வியன்னாவில் நேற்று (புதன்கிழமை) இருவர் கத்திக்குத்தை நடத்தியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் 17 வயதுடைய மகளொருவர் மீது ஒருவர் கத்திக்குத்தை நடத்தியுள்ளார்.  இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர் மற்றுமொரு கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதன்போது, ஒருவர் படுகாயமடைந்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த 4 பேரும் ஆபத்தான நிலையிலுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தக் கத்திக்குத்துச் சம்பவங்களுக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg