Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் தீர்மானத்தால் பிரயோசனம் இல்லை – மக்ரோன்

In ஐரோப்பா
Updated: 11:24 GMT, Mar 8, 2018 | Published: 11:24 GMT, Mar 8, 2018 |
0 Comments
1060
This post was written by : Suganthini

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமை மூலம், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் காணப்படும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு உதவவில்லையென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பரிஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரவுவேளை விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக அங்கீகரித்துள்ளார். இருப்பினும், ட்ரம்ப்பின் இந்தத் தீர்மானம் மூலம், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் நிலவும் முறுகல் நிலையைத் தீர்ப்பதற்கு உதவவில்லை’ என்றார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வருடம் டிசெம்பர் 6ஆம் திகதி அங்கீகரித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg