Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போரில் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்: சத்தியமூர்த்தி

In இலங்கை
Updated: 12:23 GMT, Mar 8, 2018 | Published: 12:23 GMT, Mar 8, 2018 |
0 Comments
1110
This post was written by : Anojkiyan

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப்பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஏற்பாடு செய்யப்பட்ட வாழ்வாதார உதவிகள் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “குறிப்பாக போரிலே பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நான் உட்பட எல்லோருமே போரில் நேரடியாகப்பாதிக்கப்பட்டவர்கள், இவ்வாறு பாதிக்கப்பட்ட எமக்கு உளநலசிகிச்சை என்பது மிக முக்கியமான ஒன்று.

இதனால் அடிக்கடி கோபம் வருதல், பதற்;றப்படுதல், ஒரு குழப்பகரமான சூழல் ஏற்படும், ஒரு முடிவை எடுக்கமுடியாதிருக்கும் எனவே இந்தசேவையைப் பெற்றுக்கொள்;ளாதவர்களும் பெற்றுக்கொள்வது மிக அவசியம். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உளநல சிகிச்சைப்பிரிவுகள் உள்ளன. அதன் மூலம் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்;ள முடியும். எல்லோருக்குமான வாழ்வாதார உதவி என்பது ஒரு நிதியுதவிதான், இதனை தொடர்ந்து யாரிடமும் கேட்கவும் முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது.

இங்கே, இருக்கின்ற அரச கட்டமைப்புக்கள் ஏதோ ஒரு வகையில் இந்த உதவிகளை வழங்கியிருக்கின்றன. இவை தவிர உதவி அமைப்புக்கள் வெளியிடத்து உதவிகள் பல்வேறு திட்டங்கள் ஊடாக பல்வேறு உதவிகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் எங்களது சமுகத்தில் அவர்கள் மீண்டெழவில்லை.

வாழ்வாதாரங்கள் எவையும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு மீள எழவில்லை. ஆகவே நிதியுதவியைப் பெற்றுக்கொள்வது என்பதைக் குறைத்து என்னால் உழைத்து வாழ முடியும் என்ற சூழ்நிலைக்கு வரவேண்டும், யுத்தத்தில் கடும் பாதிப்புற்றவர்கள் பலர் தங்களுடைய உழைப்பால் முன்னேற்;;றம் கண்டிருக்கின்றார்கள். ஆனால், எங்களால் அந்த முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg