Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டேஃபோர்ஷெயர் ஜே.சி.பி. நிறுவனத்தில் 600 வேலைவாய்ப்புகள்

In வணிகம்
Updated: 11:36 GMT, Mar 9, 2018 | Published: 11:36 GMT, Mar 9, 2018 |
0 Comments
1053
This post was written by : Risha

ஸ்டேஃபோர்ஷெயரிலுள்ள அகழ்வு பணிக்கான கனரக வாகனங்களை தயாரிக்கும் முதன்மை நிறுவனமான ஜே.சி.பி. நிறுவனத்தில் உற்பத்தித்துறையில் 600 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் மூன்றில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் உடனடியாக வழங்கப்படும் எனவும், ஏனைய வேலைவாய்ப்புகள் எதிர்வரும் 12 வாரங்களுக்குள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பகுதிக்கான சிறந்த ஊக்குவிப்பாக அமையும் என உள்ளூர் அதிகாரியொருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜே.சி.பி. தலைமையகத்திலுள்ள நூறிற்கும் அதிகமான வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg