Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதம் நாட்டுக்கு அவசியமில்லை : இசுர தேவப்பிரிய

In இலங்கை
Updated: 05:13 GMT, Mar 10, 2018 | Published: 02:04 GMT, Mar 10, 2018 |
0 Comments
1119
This post was written by : Ravivarman

இனவாதம், மதவாதம் போன்றவை எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாட்டிலுள்ள சகல இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் சில இனவாத சக்திகள் அமைதியான சூழலைக் குழப்புவதற்கான சதிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

எமது நாட்டைக் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து மீட்பதற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் இணைந்தே பாடுபட்டனர்.

நாட்டிலுள்ள அனைவரும் மீண்டும் இந்த நாட்டைப் பிரித்துவிடாமல், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் இனவாத சக்திகளுக்கு இடம்கொடுக்காமல் அமைதியாக, சகல இனங்களுக்கும் மதிப்பளித்து வாழவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்’ என முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg