Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி

In
Updated: 12:55 GMT, Mar 24, 2018 | Published: 10:05 GMT, Mar 24, 2018 |
0 Comments
1139
This post was written by : Puvanes

அனைத்திற்கும் காரணமான அல்லாஹ் என்பவன் வார்த்தைகளால் மட்டுமல்ல எதனாலும் அளவிட முடியாதவன். அவனே அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றான்… பிரபஞ்ச இயக்கத்தையும் அவனே ஆட்டுவிக்கின்றான்… ஒவ்வோர் மனிதனையும் அவதானிக்கின்றான்.

அல் குர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி தெளிவாக பார்க்கலாம்.

அல்லாஹ் அவனே எல்லாம் வல்லவன் அவன் எங்கே இருக்கிறான்? “இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே ஏக நாயகனாகிய அல்லாஹ் இருக்கிறான். என அல்குர்ஆன் : 6:3 உரைக்கின்றது.

​அனைத்திற்கும் முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 57:3)

குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 9:40)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 2:186)

​நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 57:4)

(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள், (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள், அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் – மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான். (அல்குர்ஆன் : 47:35)

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன், எல்லாம் அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:115)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம், அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 50:16)

​(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான், (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான், முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான், நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:17)

​அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும், தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை), ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான், (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான், மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் : 24:39)

​எனவே (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) “அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்றும் சொல்லப்படுகின்றது. இக்கொள்கை எந்த வகையிலும் திருக்குர்ஆனுக்கோ, திரு நபியின் நிறைமொழிகளுக்கோ ஒரு மண்ணளவும் முரணானதல்ல. அதேபோல் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையில் பின்பற்றுகின்ற இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அகீதா” கொள்கைக்கும் முரணானதல்ல.

​இக்கொள்கையே இஸ்லாமின் உயிர் என்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. இக்கொள்கையே றஸூல்மார், நபீமார், வலீமார், மஷாயிகுமார் சொன்ன கொள்கை. இக்கொள்கையே சரியான கொள்கை என்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் இறை ஞானிகளான ஆரிபீன்களின் நூல்களிலும் பரந்து விரிந்த ஆதாரங்கள் உள்ளன.

​​இப்பிரசுரத்தின் மூலம் எனது நோக்கம் என்னவெனில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான், அவன் தினமும் இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்ற வழிகெட்ட வஹ்ஹாபிகளின் கொள்கையை மறுப்பதும், மற்றும் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை மறுப்பதுமேயாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg