Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீதியைத் தரும் செவ்வாய் தோஷம்!

In
Updated: 13:15 GMT, Mar 10, 2018 | Published: 13:15 GMT, Mar 10, 2018 |
0 Comments
1164
This post was written by : Puvanes

ஒருவரை ஆட்டிப்படைக்கும் விடயங்களில் செவ்வாய் தோஷமும் முக்கியமானதொன்றாகும். திருமணத் தடைக்கும் பிரதான காரணம் இந்த செவ்வாய் தோஷம் எனக் கருதப்படுகின்றது.

செவ்வாய் சோஷம் என்றாலே சனிப் பெயர்ச்சி போன்றதொரு அச்சம் அநேகமானவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது. இந்த செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஒருவரின் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். 1, 2, 4, 7, 8 அல்லது 12-ஆம் கட்டத்தில் செவ்வாய் வந்தால், ஜோதிட சாஸ்திரத்தின் படி, அந்த நபருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்கள் இருக்கும். அதுவும் திருமணத்தின் மீது இந்த தாக்கம் அதிகமாக இருக்கும்.

திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும் போது, இதை ஒரு முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. திருமணத்தை தீர்மானிக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா எனவும், பொருத்தம் உள்ளதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.

ஒருவருன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் இந்த செவ்வாய் தோஷத்தின் பண்புகள் என்ன?

ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கலாம். செவ்வாய் என்பது உமிழும் கோபத்தை குறிக்கும். அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு கோபம் கொள்ளும் குணம் அதிகமாக இருக்கக்கூடும்.

செவ்வாய் தோஷக்காரர்களுக்கு உமிழும் அளவிலான ஆற்றல் திறன் இருக்கும். அதனை அழிவிற்கு பயன்படுத்தாதவாறு அதனை அவர்கள் சரியாக வழிநடத்திட வேண்டும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாகும்.

செவ்வாய் தோஷம் திருமணத்தில் டென்ஷன் மற்றும் முரண்பாடுகளை உண்டாக்கும். செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என நம்பப்படுகிறது.

சென்ற ஜென்மத்தில் தங்கள் கணவன் அல்லது மனைவியை ஒழுங்காக நடத்தாதவர்களுக்கு தான் இந்த தோஷம் உண்டாகும்.

செவ்வாய் முதல் கட்டத்தில் வரும் போது, திருமணத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபரின் குடும்பம் பாதிக்கப்படும்.

செவ்வாய் நான்காம் கட்டத்தில் வரும் போது, தொழில் ரீதியான வாழ்க்கையில் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.

செவ்வாய் ஏழாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபரிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் திறன் அவரை கடும் கோபக்காரராக வைத்திருக்கும். அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது. செவ்வாய் எட்டாம் கட்டத்தில் வரும் போது, தன் வீட்டு பெரியவர்களின் பகைக்கு ஆளாகி தந்தை வழி சொத்தை இழப்பார்கள்.

செவ்வாய் பத்தாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபர் மனநிலை பிரச்சனையால் அவதிப்படுவார். மேலும் எதிரிகளுடன் கூடிய நிதி சார்ந்த நஷ்டங்களை சந்திப்பார். செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம். செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும். செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணிய ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சோதிடம் கூறுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg