Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாப்வே வீரருக்கு பந்துவீச தடை

In கிாிக்கட்
Updated: 04:03 GMT, Mar 12, 2018 | Published: 04:03 GMT, Mar 12, 2018 |
0 Comments
1151
This post was written by : Velauthapillai Kapilan

சிம்பாவே அணியின் 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரையன் வெட்டோரிக்கு (Brian Vitori) பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் சபை இத்தடையை பிறப்பித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய பந்துவீச்சுப் பாணி என்பதனால், அவருக்கு இத்தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரு தடவைகள் இதே சிக்கலில் அகப்பட்டு, பந்துவீச்சுப் பாணியை மாற்றியமைத்து போட்டிகளுக்கு திரும்பிய பிரைன் வெட்டோரி மீண்டும் தடைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  பிரையன் வெட்டோரி சிம்பாவே அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளிலும், 11 ரி-ருவென்ரி போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg