Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலுக்கு முன்னரான பணிகள் தொடர்பாக டக் ஃபோர்ட் கருத்து!

In கனடா
Updated: 08:51 GMT, Mar 12, 2018 | Published: 07:56 GMT, Mar 12, 2018 |
0 Comments
1063
This post was written by : Anojkiyan

ஒன்ராறியோவின் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னராக ஆற்றவேண்டிய பணிகள் பலவுள்ளதாக, ஒன்ராறியோ முற்போக்கு பழைமைவாதக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ முற்போக்கு பழைமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற்று அதுகுறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் முடிவுகளும், தற்போதைய சம்பவங்களும், நாங்கள் இன்னமும் நிறையவே பணியாற்ற வேண்டியுள்ளது என்பதனை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

எதிர்வரும் மாகாண சட்டமன்ற தேர்தலுக்கு முன்னராக நிறையவே பணிகளை ஆற்ற வேண்டியுள்ளது. சவால்கள் நிறையவே உள்ளன” என கூறினார்.

ஒன்ராறியோ மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக டக் ஃபோர்ட் வெற்றி பெற்றுள்ளமை அவரின் அடுத்தக் கட்டத்திற்கான நகர்வை வலுப்படுத்தியுள்ளது.

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டீன் எலியோட், வழக்கறிஞரும் வர்த்தகருமான கரோலைன் முல்ரோனி, ரொறன்ரோவின் முன்னாள் நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட், பெற்றோர் உரிமைகள் செயற்பாட்டாளர் தான்யா கிரானிக் அலென் ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg