Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகைகள் டூயட் பாடுவதற்கு மட்டுமே! – ராதிகா ஆப்தே கவலை!

In சினிமா
Updated: 15:17 GMT, Mar 12, 2018 | Published: 15:17 GMT, Mar 12, 2018 |
0 Comments
1073
This post was written by : Vithushagan

கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே, திரைப்படங்களில் நாயகிகள் காதல் காட்சிகளுக்கும், கதாநாயகனுடன் டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், தனக்கு அதில் உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார். ராதிகா ஆப்தே அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

“நடிகைகளை காதல் காட்சிகளுக்கும், கதாநாயகனுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  எனக்கு அதுபோன்று நடிப்பதில் உடன்பாடு இல்லை.

திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேடங்களிலும் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg