Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலி. வடக்கு பிரதேச பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு

In இலங்கை
Updated: 08:37 GMT, Mar 13, 2018 | Published: 04:20 GMT, Mar 13, 2018 |
0 Comments
1099
This post was written by : poovannan

அண்மையில் விடுவிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட பிரதேசமான வலிகாமம் வடக்கு பிரதேசங்களான தையிட்டி மற்றும் ஊரணி பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு வட. மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நேரில் விஜயம் செய்துள்ளார். இவருடன், வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தவிசாளரான சுகிர்தனும் சென்றுள்ளார்.

அண்மையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஊரணி கனிஷ்ட வித்தியாலயம், தையிட்டி கணேசா வித்தியாசாலை மற்றும் சிவகுருநாதர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இவர்கள் செய்தனர்.

இதன்போது, பாடசாலையின் இடப்பற்றாக்குறை, ஆசிரியர்கள் இன்மை, குடிநீர் போன்ற பல்வேறு பிரச்சினைகளை குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் பா.கஜதீபனிடமும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவு செய்யப்பட்ட தவிசாளரான சோ.சுகிர்தனிடமும் எடுத்துக் கூறினர்.

இதனையடுத்து, இப்பிரச்சினைகள் தொடர்பாக உரிய தரப்புகளின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg