Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

In இலங்கை
Updated: 09:16 GMT, Mar 13, 2018 | Published: 07:06 GMT, Mar 13, 2018 |
0 Comments
1134
This post was written by : poovannan

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆறு விளையாட்டுக் கழகங்களுக்கு சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த விளையாட்டு உபகரணங்களை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் இணைப்புச் செயலாளர் ஜே.பிரைமிளஸ் கொஸ்தா நேற்று (திங்கட்கிழமை) வழங்கிவைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமீயூ முஹம்மது பஸ்மியின் வேண்டுகோளுக்கு இணங்க, தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், மேற்படி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விளையாட்டு உபகரணங்கள் விளையாட்டுக் கழகங்களான உப்புக்குளம், பனங்கட்டுக்கொட்டு, பள்ளிமுனை, சௌத்பார் மற்றும் தாழ்வுபாடு ஆகியனவற்றுக்கும் மன்னார் மாவட்ட மெய்வல்லுனர் சங்க விளையாட்டுக் கழகத்திற்கும் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg