Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்களை மகிழ்வித்த சிரிப்பு யோகா பயிற்சி

In இந்தியா
Updated: 03:52 GMT, Mar 14, 2018 | Published: 03:52 GMT, Mar 14, 2018 |
0 Comments
1127
This post was written by : Kemasiya

இந்தியாவின் மேற்கு சூரத் நகரில் பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து சிரிப்பு யோகா பயிற்சியொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) சிரிப்பு தினத்தை முன்னிட்டு வைத்தியர் மதன் கதிரியாவின் யோகா நிலையத்தினால் இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது எப்போதும் கல்வியோடு இருக்கும் மாணவர்கள், தினமும் சில நிமிடங்களாவது புன்னகை யோகா பயிற்சியை மேற்கொண்டு, மனதை இன்புற செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

இதற்காக குறித்த பயிற்சியில் பல நகைச்சுவைகளை கூறி நடனம், பாடல் என மாணவர்களை சில மணி நேரம் தொடர்ச்சியாக சிரிக்க வைப்பதே குறித்த பயிற்சியின் நோக்கமாக காணப்பட்டது.

இப்பயிற்சியில் சிரிக்காமல் இருந்த மாணவர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து புன்னகைக்கும் காட்சிகளை காணமுடிந்ததென யோகா நிறுவுனர் மதன் கதிரியா தெரிவித்துள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg