Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவுக்கு புறப்படவுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர்

In இந்தியா
Updated: 07:08 GMT, Mar 14, 2018 | Published: 06:28 GMT, Mar 14, 2018 |
0 Comments
1070
This post was written by : Kemasiya

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா புறப்படவுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறும் மாநாட்டில் அமைச்சர் பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத்துறை செயலகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தின் போது சீன அதிகாரிகளுடன் டோக்லாம் விவகாரம் தொடர்பில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை சீனாவிற்கு செல்வதற்கு முன்னர் எதிர்வரும் 28ம் திகதி வெளியுறவுத்தறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து ஐப்பானுக்கு புறப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த விஜயத்தின்போது ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரதிநிதிகளை இவர்கள் சந்தித்து பேசவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg