Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹிஸ்புல்லாவின் கோரிக்கை வேடிக்கையானது: இந்து சம்மேளன தலைவர்

In இலங்கை
Updated: 06:50 GMT, Mar 14, 2018 | Published: 05:32 GMT, Mar 14, 2018 |
0 Comments
1555
This post was written by : poovannan

தமிழர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா செயற்பட்டதாகவும்,  தற்போது அவர் தமிழர் – முஸ்லிம் நல்லிணக்க உறவு பற்றி கூறுவது வேடிக்கையானது எனவும் இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கண்டி திகன வன்முறைகள் தொடர்பாக அமைச்சர் ஹிஸ்புல்லா வழங்கிய செவ்வி தொடர்பாக, இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “மட்டக்களப்பில் பிள்ளையார் கோயிலை சேதப்படுத்தி சந்தைக்கட்டட தொகுதி அமைத்தமை, தமிழரான நீதிபதியை இடமாற்றம் செய்து முஸ்லிம் நீதிபதியை நியமித்தமை, எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை கொலைசெய்ய உடந்தையாகச் செயற்பட்டமை என ஹிஸ்புல்லா பல சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார்.

மேலும், கிழக்கில் முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் அரசியல் தீர்விற்கு சாதகமான ஒத்துழைப்பை முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லெண்ணத்தை சிதைக்கவும் முற்படுகிறார். அவ்வாறானவர்  நல்லிணக்கம் பற்றி பேசுவது வேடிக்கையானது” எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg