Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து ஹெலிகொப்டர் விபத்தில் ஒருவர் காயம்

In
Updated: 06:34 GMT, Mar 14, 2018 | Published: 06:34 GMT, Mar 14, 2018 |
0 Comments
1199
This post was written by : Elakkiya

ஸ்கொட்லாந்து பேர்த் விமான நிலையத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக ஸ்கொட்லாந்து அம்புலன்ஸ் சேவைப் பிரிவின் டுவிட்டர் பக்கத்தில், தரைச் சோதனையின் போது ஹெலிகொப்டர் விபத்துக்கு உள்ளானதாகவும், சுமார் 100 மீற்றர் உயரத்திலிருந்து வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலில் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க காயமடைந்தவர் ஒரு பொறியியலாளர் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg