Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அக்கராயன்குளம் பொலிஸ் காவலரண் தரமுயர்த்தப்பட்டது

In இலங்கை
Updated: 08:05 GMT, Mar 14, 2018 | Published: 08:05 GMT, Mar 14, 2018 |
0 Comments
1082
This post was written by : poovannan

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் காவலரண், பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. இந்நிகழ்வு, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலிலும் நாடு முழுவதும் 600 பொலிஸ் நிலையங்களை உருவாக்கும் கருத் திட்டத்தின் கீழ், 480 ஆவது பொலிஸ் நிலையமாக இது திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன, மக்கள் தொடர்பாடல் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg