Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிரடித் திட்டம்! – மிரட்டப் போகும் இலங்கை அணி

In கிாிக்கட்
Updated: 07:50 GMT, Mar 14, 2018 | Published: 07:50 GMT, Mar 14, 2018 |
0 Comments
2697
This post was written by : Puvanes

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் திறனை மேலும் வளர்க்கவும், அவர்களது உடற்தகுதியினை நுணுக்கமாக ஆய்வு செய்யவும், உலகின் முன்னணி கால்பந்து கழகமான பார்சிலோனா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

மைதானத்தில் விளையாடும் வீரர்களின் உடல் அசைவுகள் மற்றும், செயற்பாடுகள் ஆகியவற்றை நுணுக்கமாக அவதானித்து ஆய்வு செய்வதற்காக பார்சிலோனா கழகம் விசேட தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் சாதனம் ஒன்றினை பயன்படுத்தி வருகின்றது.

அதே நுட்பத்தினை இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதோடு இதற்காக சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த தொழில் நுட்பம் மூலம் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு, பந்துவீச்சு என அனைத்து செயற்பாடுகளின் போதும் வீரர்களின் உடல் அசைவுகள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வீரர்களின் குறை, நிறைகள் தொடர்பில் அவதானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக தொடர் தோல்விகள் மற்றும், வீரர்களின் உபாதைகள் போன்றவற்றினால் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை அணியின் வளர்ச்சிக்கு இந்த தொழில் நுட்பம் பாரிய உதவி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது நடைபெற்று வரும் சுதந்திரக் கிண்ணப் போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணி வீரர்களுக்கு குறித்த சாதனம் வழங்கப்பட்டு, அவர்கள் அதனை கைகளில் அணிந்தவாறு விளையாடுவார்கள் எனவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg