Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!

In இலங்கை
Updated: 14:44 GMT, Mar 14, 2018 | Published: 14:44 GMT, Mar 14, 2018 |
0 Comments
1195
This post was written by : Vithushagan

அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து பெருந்திரளான சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் தமது சுற்றுலாவிற்காக நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, ஹோட்டன் பிலேஸ் உள்ளிட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே மற்றும் பொடி மெனிக்கே ஆகிய புகையிரதங்களில் அதிகமான வெளிநாட்டு சுற்றலாபிரயாணிகளே காணப்பட்டுள்ளனர்.

ஹட்டன் புகையிரத நிலையத்தில் வழமைக்கு மாறாக இன்றைய தினம் அதிகமான சுற்றுலா பிரயாணிகள் வந்து இறங்கியதாக அங்கு கடமை புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg