Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்நாட்டின் கௌரவ தொடரை முன்கூட்டியே பங்களாதேஷிற்கு தாரை வார்த்தது இலங்கை அணி!

In கிாிக்கட்
Updated: 03:36 GMT, Mar 17, 2018 | Published: 03:36 GMT, Mar 17, 2018 |
0 Comments
2043
This post was written by : Anojkiyan

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட முத்தரப்பு சுதந்திரக் கிண்ண ரி-ருவென்ரி தொடரின், தீர்க்கமான பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில், அவமானத் தோல்வியுடன் இலங்கை அணி தொடரைவிட்டு வெளியேறியுள்ளது.

அத்தோடு, நாட்டின் கௌரவ தொடரை இழந்து சொந்த நாட்டு இரசிகர்களின் முன் ஏற்பட்ட தலைக்குனிவுடன் அரங்கை நோக்கி சென்ற இலங்கை வீரர்களுக்கும், பங்களாதேஷ் வீரர்களுக்கும் இதன்போது மோதலும் ஏற்பட்டது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இறுதிபோட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற ஆக்ரோஷத்துடன் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் களமிறங்கின.

இதன்படி இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, முதல் ஐந்து ஓவரிலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து அணியின் நலனை கருத்திற்கொண்டு நிதானமாக துடுப்பெடுத்தாடிய குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோர் இணைந்து அணிக்கு சிறந்த இணைப்பாட்டத்தை கொடுத்தனர். இதன்படி இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
இதன்போது குசல் பெரேரா 61 ஓட்டங்களும், திசர பெரேரா 58 ஓட்டங்களையும் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி, ஆரம்பத்தில் அதிரடியாக துடுப்பெடுதாடினாலும், போட்டி நிறைவுக்கட்டத்தை எட்டும் போது விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளாகியது. ஆனால் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மொஹமதுல்லா களத்தில் இறுதிவரை போராடி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் தமீம் இக்பால் அணியின் அதிகபட்ச ஓட்டமாக 50ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, மொஹமதுல்லா ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலம் இத்தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது. நூளை மறு தினம் நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் பங்களாதேஷ் அணி, இந்திய அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg