Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தரப்பு T-20 போட்டியில் வெல்லப்போவது யார்?

In கிாிக்கட்
Updated: 08:38 GMT, Mar 18, 2018 | Published: 08:00 GMT, Mar 18, 2018 |
0 Comments
1238
This post was written by : Velauthapillai Kapilan

இலங்கை ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் முத்தரப்பு T-20 போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ள நிலையில்,  இவ்விரு அணிகளுக்குமிடையில் இன்று  பலத்த போட்டி இடம்பெறவுள்ளது.

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி முத்தரப்பு T-20 என்ற இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

இதன் முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. பின்னர் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் வென்று, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கடந்த (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இறுதிச்சுற்றுக்குள் நுழைவதற்கான போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய பங்களாதேஷ்  அணி இறுதிச்சுற்றுக்கு தெரிவானது.

எனவே இன்று மாலை ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் முத்தரப்பு T-20 இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இதன்போது இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்

இந்திய அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா (அணித்தலைவர்), சுரேஷ் ரெய்னா, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் அல்லது ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல்.

பங்களாதேஷ் அணி: தமிம் இக்பால், லிட்டான் தாஸ், சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், சவும்யா சர்கார், மக்முதுல்லா, ஷகிப் அல்-ஹசன் (அணித்தலைவர்), மெஹிதி ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான், ருபெல் ஹூசைன், நஸ்முல் இஸ்லாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg