Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம்: மன்மோகன் சிங்

In இந்தியா
Updated: 11:14 GMT, Mar 18, 2018 | Published: 11:14 GMT, Mar 18, 2018 |
0 Comments
1141
This post was written by : Yuganthini

இந்தியாவின் பொருளாதாரத்தை மத்திய அரசு வீழ்ச்சி பாதைக்குள் கொண்டுச் சென்றுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் முறையான சீராய்வை மேற்கொள்ளாதமையே என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகின்றது அதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறுகையில்,

“மோடி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆகியவற்றினால் சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்து விட்டன.

ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் முறையான நடவடிக்கைகளை மத்திய அரசு பின்பற்றாதமையால் நாளுக்கு நாள் அப்பகுதியில் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றது.

மேலும் மக்களுக்கு செய்து தருவதாக கூறிய நலத்திட்டங்களையும் மோடியின் அரசாங்கம் செய்யாமல் பொய்யான வாக்குறுதிகளையே மக்களுக்கு வழங்கியது” என,அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg