Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல முயற்சித்த மகள் – தாயாரின் இறுதிச் சடங்கில் நெகிழ்ச்சித் தருணம்!

In
Updated: 13:23 GMT, Mar 18, 2018 | Published: 13:23 GMT, Mar 18, 2018 |
0 Comments
2537
This post was written by : Litharsan

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு அழைத்துவரப்பட்டிருந்த அரசியல் கைதியான தனது தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல மகள் முயற்சித்தமையானது அனைவரது மனதையும் நெகிழவைத்துள்ளது.

சுகயீனம் காரணமாக கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்த ஆனந்தசுதாகர் யோகராணியின் இறுதிச் சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மருதநகரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் மனையிவியின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்வதற்காக அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர் பொலிஸாரினால் அழைத்துவரப்பட்டார்.

கிரியை நிறைவடைந்த பின்னர் தனது தந்தையை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லும் போதே அவரது மகளும் பேரூந்தில் ஏற முயற்சித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட ஆனந்த சுதாகருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்போது ஒப்புதல் வாக்கு மூலத்தின் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக கடும் சுகவீனமுற்ற ஆனந்த சுதாகரின் மனைவி உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு ஆனந்தசுதாகரிற்கு 3 மணித்தியாளங்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg