Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பம்

In இந்தியா
Updated: 06:11 GMT, Mar 19, 2018 | Published: 06:11 GMT, Mar 19, 2018 |
0 Comments
1063
This post was written by : Varshini

தமிழகத்தின் 2018-2019ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. கேள்விநேரம் முடிந்த பின்னர் விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

இவ்விவாதம் எதிர்வரும் இரு தினங்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளதோடு, 22ஆம் திகதியன்று சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழக நிதியமைச்சர் என்ற ரீதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கவுள்ளார்.

தமிழகத்தின் புதிய நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சட்டசபையில் கடந்த 15ஆம் திகதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg