Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த விமலுக்கு பிடியாணை!

In இலங்கை
Updated: 06:36 GMT, Mar 19, 2018 | Published: 06:35 GMT, Mar 19, 2018 |
0 Comments
1608
This post was written by : Risha

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, கட்சியின் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவிற்கு எதிராகவும் இன்று (திங்கட்கிழமை) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டமை குறித்து கருவாத்தோட்டம் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால், வழக்கு விசாரணைக்கு குறித்த இருவரும் ஆஜராகாத நிலையிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தின் போது, கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாகவே அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg