Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி – அம்பாறை வன்முறைகள் தொடர்பில் ஈராக் தூதுவரிடம் ஹரீஸ் தெரிவிப்பு

In இலங்கை
Updated: 14:36 GMT, Mar 19, 2018 | Published: 14:36 GMT, Mar 19, 2018 |
0 Comments
1083
This post was written by : poovannan

கண்டி மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், இலங்கைக்கான ஈராக் நாட்டின் தூதுவர் அகமட் ஹமீட் அல் ஜுமைலிடம் விபரித்துக் கூறினார்.

விளையாட்டுத்துறை அமைச்சு அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான நட்புறவு சம்பந்தமாக கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.

குறித்த சம்பவங்களின்போது பள்ளிவாசல்கள், முஸ்லிங்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டமை, அவற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை என்பன தொடர்பிலும் அவர் எடுத்துக் கூறினார்.

அத்தோடு இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர விளையாட்டு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg