Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் ஆதரவை எதிர்பார்க்கும் மஹிந்த அணி!

In இலங்கை
Updated: 15:07 GMT, Mar 19, 2018 | Published: 15:07 GMT, Mar 19, 2018 |
0 Comments
1116
This post was written by : Vithushagan

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய பிரதான கட்சிகளும் பிரதமருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வர வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தலையீடு மிகுந்த அவசியமாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான வலைப்பிண்ணலை தவிர்ப்பதற்காக ஒரேயொரு வழிதான் ஜனாதிபதியின் தெளிவான தலையீடு மற்றும் சுதந்திரக் கட்சியின் 44 உறுப்பினர்களுக்குமான ஜனாதிபதியின் தீர்க்கமான உத்தரவு என்பதாகும்.

குறித்த 44 உறுப்பினர்களிடையே பல்வேறு சிந்தனைகள் உள்ளன. அதில் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து வரப்பிரசாதங்களை அனுபவித்து இந்த அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டுசெல்ல விரும்புகின்றனர்.

அதேபோல இன்னும் சிலர் தேசிய அரசிலிருந்து விலகி சுயாதீனமாக எதிர்கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு நினைக்கின்றனர். அத்துடன் எஞ்சிய பிரிவினர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு விரும்புகின்றனர். 4ஆவது குழுவொன்று உள்ளது.

அவர்கள் இன்னும் ஒருமுடிவுக்கு வரவில்லை. எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த வாரம் சமர்பிக்கப்படும். அதனை வெற்றிபெறச் செய்வதற்கு சுதந்திரக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி அவர்களுக்கு கூறவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg