Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த லண்டனில் கருத்தரங்கு

In இலங்கை
Updated: 08:41 GMT, Mar 20, 2018 | Published: 07:11 GMT, Mar 20, 2018 |
0 Comments
1185
This post was written by : poovannan

புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் ‘எதிர்கால தமிழினத்தின் பரிணாம வளர்ச்சியின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று லண்டன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளையோர்கள் மூலம் இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களை எவ்வாறு வென்றெடுப்பது போன்ற விடயங்கள் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆராயப்பட்டது.

தொடர்ந்து இக்கருத்தரங்கில், தமிழ் சமூகம் அரசியல் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் எதிர்கொள்ளப்போகும் சவால்கள், ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுகள்,  புலம்பெயர் தமிழர்களின் பலமும் அறிவும் போராட்டம் நோக்கி பயன்படுத்தப்படும் விதம், அதிகரித்துச் செல்லும் ஆபத்துக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாணிக்கவாசகர், பிரதமரின் பிரத்தியேக செயலாளர் வசந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகதாஸ், நீதிராஜா மற்றும் நிமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg