Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்குக் கடத்துவதற்குத் தயாராகவிருந்த கடலட்டைகள் பறிமுதல்!

In இந்தியா
Updated: 10:30 GMT, Mar 20, 2018 | Published: 10:30 GMT, Mar 20, 2018 |
0 Comments
1093
This post was written by : Ravivarman

இலங்கைக்கு கடத்துவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மண்டபம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்தப்படவிருந்த சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மேற்படி கடலட்டைகளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

செவ்வாய்க்கிழமை அதிகாலை மண்டபத்தை அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து கடலட்டைகள் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறையினர் வேதாளை கடற்கரையை சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது படகு ஒன்றில் கடலட்டைகள் கொண்ட மூட்டைகள் ஏற்றப்பட்டமை தெரியவந்ததையடுத்து குறித்த படகைச் சுற்றிவளைத்து 10 கடலட்டை மூட்டைகளையும், படகையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மூட்டைகளைச் சோதனை செய்தபோது அவற்றில் 500 கிலோ கடலட்டைகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கரையோரம் வாழ் மக்களிடமும் மீனவர்களிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மண்டபம் பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg