Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓமந்தை – நாவற்குளம் கிராமத்தின் வீதி புனரமைப்பு

In இலங்கை
Updated: 12:06 GMT, Mar 20, 2018 | Published: 12:05 GMT, Mar 20, 2018 |
0 Comments
1061
This post was written by : poovannan

வவுனியா – ஓமந்தை பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நலன் கருதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத வீதியொன்று புனரமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கதிரவேலு கணேசலிங்கம், அவரது சொந்த நிதியில் இவ்வீதியை புனரமைத்துள்ளார்.

இப்பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்ட 35 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீதி சீரின்மையால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், “தேர்தல் காலங்களில் பலர் வீதியை திருத்துவதாக வாக்குறுதிகளை அளித்தார்கள். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் கணேசலிங்கம் குறித்த வீதியைப் புனரமைத்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg