Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிழையான சட்டத்தால் தமிழர்களின் வாழ்க்கை நிர்க்கதியில்: நாடாளுமன்றில் சார்ள்ஸ் கடும் கண்டனம்

In இலங்கை
Updated: 12:13 GMT, Mar 20, 2018 | Published: 12:13 GMT, Mar 20, 2018 |
0 Comments
1165
This post was written by : Varshini

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் விளைவு கொடூரமானதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். பிழையான இச்சட்டத்தால் தமிழ் இளைஞர்கள் பலர் சிறையில் வாடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நீதித்துறை சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2008ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்ற அரசியல் கைதியின் மனைவி கடந்த வாரம் கிளிநொச்சியில் காலமானார். இதனையடுத்து அவரது பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனரென சபையில் சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், குழந்தைகள் மீது பாசத்தை பொழியும் ஜனாதிபதி, இச்சிறார்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆனந்தசுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லையென்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் எப்போது நீக்கப்படும் என்பதை நீதியமைச்சு உடன் அறிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg