Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி முஸ்லிம் பிரதிநிதிகள் – அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கச் சந்திப்பு!

In இலங்கை
Updated: 16:20 GMT, Mar 21, 2018 | Published: 16:20 GMT, Mar 21, 2018 |
0 Comments
1043
This post was written by : Ravivarman

கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ. ஹலீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயந்த திஸாநாயக்க, ஆனந்த அழுத்கமகே, மத்திய மாகண சபை உறுப்பினர்களான லாபிர், ஹிதாயத் சத்தார், புதிய பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவும், அதன்பின்னரான இழப்பீடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg