Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்து: இரு அமெரிக்கர்கள் உயிரிழப்பு

In
Updated: 04:41 GMT, Mar 22, 2018 | Published: 04:41 GMT, Mar 22, 2018 |
0 Comments
1115
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவின் குயீன்ஸிலாந்து பகுதிக்கு அப்பாலான பகுதியில் ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில், அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஹெலிகொப்டர் தரையிறங்கும்போது நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது. இதன்போது, 65 வயதான பெண்ணொருவரும் 79 வயதான ஆணொருவரும்   உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஹெலிகொப்டரில் பயணித்த விமானி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லையெனக் கூறியுள்ள அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை, விசாரணையை ஆரம்பித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg