நிலை குலைந்தது இங்கிலாந்து: அதிர வைத்தது நியூசிலாந்து

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, இன்றைய ஆட்டநேர முடிவில் நியூலாந்து அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதற்கமைய நியூசிலாந்து அணி 117 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
ஆட்டநேர முடிவில், ஹென்ரி நிக்கோல்ஸ் 24 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆக்லாந்து இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 58 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக கிரைஜ் ஓவர்டொன் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் போல்ட் 6 விக்கெட்டுகளையும், சவுத்தீ 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.