Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச தொழில் வாய்ப்புக்களை நம்பி காலத்தை வீணடிக்கின்றனர்: உதயகுமார்

In இலங்கை
Updated: 14:53 GMT, Mar 22, 2018 | Published: 14:53 GMT, Mar 22, 2018 |
0 Comments
1066
This post was written by : Anojkiyan

பல்வேறு வழிகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறக்கூடய சூழல் இருந்தும் நம்மவர்கள் இன்னும் அரச தொழில் வாய்ப்புக்களைத்தான் நம்பிக்கொண்டும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டு காலத்தையும் வீணடிக்கின்றனர் என மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தரின் 156வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “மிகக் கூடுதலான மாணவர்கள் கல்விப் பொத்தர சாதாரண தரம் கற்ற பின்பு அவர்களது கற்றலை நிறுத்துகின்றார்கள். அதுபோல் கல்விப் பொதுத்தர உயர்தரத்திலே சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாதவர்கள் தங்களது அடுத்த நிலை என்ன எப்பதுகூட அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் இவ்வாறான இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்குகின்றமை பாராட்டத்தக்கதாகும்.

இவ்வாறு கற்றுக் கொள்ளும் இளைஞர் முஷயுவதிகள் எதிர்காலத்தில் தமது சொந்த முயற்சியில் வாழ்வில் எழுந்து நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றால் வாழ்வில் மிகச்சிற்பான இலக்குகளை அடைய முடியும்.

சமுத்திரப் பல்கலைக் கழகம், கணிணி, சுற்றுலாத்துறை, போன்ற பிற கற்கை நெறிகளையும கற்று பல்கலைக்கழகம் வரைக்கும் செல்லும் வாய்புக்களும் காணப்படுகின்றன. எந்தத் துறையை நாம் தேர்ந்தேடுத்தோமோ அந்தத்துறையில் உச்சம் காண்பவர்களாக இருக்க வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg