Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரான் விக்ரமரத்னவை பின்தொடரவுள்ள ஐ.தே.க. உறுப்பினர்கள்!

In இலங்கை
Updated: 14:59 GMT, Mar 23, 2018 | Published: 08:03 GMT, Mar 23, 2018 |
0 Comments
1435
This post was written by : Risha

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தவிர, ஏனைய கட்சி அதிகாரிகள் அனைவரும் தங்களது கட்சி பொறுப்புகளிலிருந்து விலகவுள்ளதாக கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இந்த பதவி விலகல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது இராஜினாமா கடிதத்தை இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஏற்கனவே கையளித்துள்ளார்.

அவரை பின்தொடர்ந்து ஏனைய கட்சி உறுப்பினர்களும் எதிர்வரும் நாட்களில் தங்களது  ராஜினாமா கடிதங்களை கையளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg